MobileVeda :: Using Mobile for Positive Change

நாலுபேருக்கு நல்லது செய்ய

பொதுவா நாலு பேருக்கு நல்லது செய்யனுமுன்னுதான் நாம எல்லாரும் நெனைக்கிறோம். அப்பிடி செஞ்சா நமக்கும் நல்லது நடக்குமுன்னு நம்பறோம் இல்லையா... சரி.. நாலுபேருக்கு நல்லது அப்பிடின்னா? பணம் தரலாமா? இல்லே எதாவது பொருள் வாங்கித்தரலாமா?

ஆனா அதெல்லாம் அழியர சொத்துக்கள் தான், அழியாத சொத்து அப்பிடின்னும் அள்ள அள்ள குறையாத சொத்துன்னு வள்ளுவரும், நிறைய பெரியவங்க சொல்ற, அறியாமைய விரட்டுற அறிவுச்செல்வத்த நாம நாலுபேருக்கு கொடுக்கலாமா?

ஆமா, இது நல்ல யோசனையா தெரியுது. அதுக்கு என்ன செய்யலாம். புத்தகங்க ஒன்னு, ரெண்டு வாங்கி தரலாம். கொஞ்சம் செலவாகும்தான். அதவிட, ஒரு நூலகத்துக்கு வாசகரா அவங்கள அறிமுகப்படுத்தலாம். செலவு கொஞ்சம் கம்மி, நிறைய பயன்படும். சரி அதவிட ஒரு நூலகத்தையே ஒவ்வொருத்தருக்கும் பரிசா கொடுத்தா எப்படி இருக்கும்..

" என்ன விளையாடுறீங்களா? நாலு ரூபா பணமா கொடுக்கறதுக்கே நம்ம பட்ஜெட் தாங்குமான்னு யோசிக்க வேண்டியிருக்குது, இதுல நூலகம் பரிசுன்னு என்ன புதுசா கிளப்புறீங்க பீதிய.." அப்பிடின்னுதானே நினைக்கிறீங்க.
நாங்க விளையாடல
உண்மையாதான் சொல்றோம்
நாங்க ஒன்னும் விளையாடல, உண்மையாதான் சொல்றோம்.. நாலுபேருக்கு ஆளுக்கு ஒரு லைப்ரரி. அதில்லாம, உங்களுக்கும் ஒன்னு. மொத்தம் அஞ்சு லைப்ரரி. மொத்தமா அஞ்சு லைப்ரரிக்கும் சேத்து ஆகுற செலவு எவ்வளவு தெரியுமா?

அறுநூறு ரூபாய்

என்ன திகைச்சு, மலைச்சுப் போயிட்டீங்க. இது சாத்தியமான்னு நினைக்கிறீங்கதானே? சாத்தியம்தான். அது எப்படின்னு சொல்றோம் கவனியுங்க.. அதாவது இன்றைக்கு அதிவேகமா போயிட்டிருக்குற விஞ்ஞான வளர்ச்சியையும், தொழில்நுட்பத்தையும் நல்ல வழிகளுக்கு, ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தனுமுன்னு முனைப்பா செயல்படுற இளைஞர்கள் முயற்சி செய்தா எதுவும் சாத்தியம் அப்பிடின்னு உணர்ரதுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

இந்த திட்டத்தோட பேரு "மிதிலை" அதாவது இங்க்லீஷ்ல மில்லியன் டிஜிட்டல் லைப்ரரி (MiDiLi) ப்ராஜெக்ட். பத்து லட்சம் மனிதர்க¨ள நடமாடும் நூலகமா மாத்துற திட்டம்.

இந்த திட்டத்தோட விதைன்னு நாங்க சொல்றது ஒருவருஷத்துக்கு முன்னாடி SEED ங்கற பேருல நம்ம மொபைல்வேதா நிறுவனம் சார்பா உருவான செல்பேசி மென்பொருள் தான். ஒரு சாதாரண செல்போன்ல நாம பயன்படுத்துற மைக்ரோசிப்புல ஆயிரம் புத்தகங்கள பதிவு செய்து தமிழ் மொழி வசதி இல்லாத செல்பெசிகளிலும் அந்த புத்தகங்கள, மொத்த தமிழ் இலக்கியங்களையும் படிக்கற மாதிரி செய்திருந்தோம்.

அதோட தொடர்ச்சியா இப்போ இந்த திட்டத்த விரிவுபடுத்தறோம். அது என்னான்னா, செல்பேசியில மட்டுமில்லாம கணினியிலும் படிக்கிறமாதிரி ஆளுக்கு ஒரு குறுவட்டு (அஞ்சுபேருக்கும்) கிடைக்கும். அத செல்பேசியில பதிவிறக்கம் செய்துகிட்டா இப்போ ஒவ்வொருத்தரும் ஒரு நடமாடும் நூலகம்தான்... அதையே வசதிப்படும்போது கணினியிலும் படிக்கலாம்..

பணம் கட்டுங்க, சீக்கிரமே அஞ்சு டிஜிட்டல் லைப்ரரிகளை உருவாக்கி, இத நம்ம தமிழ் மொழியோட வளர்ச்சிக்கு நம்முடைய பங்களிப்பா செய்யலாம்.

உங்களை மாதிரி சான்றோர் பெருமக்கள் துணையோட, முன்னமே சொன்ன மாதிரி பத்து லட்சம் நடமாடும் நூலகங்களை உருவாக்குறதுதான் எங்களோட லட்சியம்.

இந்த திட்டத்தைப்பத்தி உங்க எண்ணங்களையும், கருத்துகளையும் தெரியப்படுத்துங்க.வாங்க, தொழில்நுட்பத்தை சரியா பயன்படுத்தி ஒரு நல்ல சமுதாய அறிவு மாற்றத்த செய்துகாட்டுவோம்.
நன்றி!