MobileVeda :: Using Mobile for Positive Change

இத்திட்டத்தைப் பற்றி

தொழில்நுட்பத்தின் துணையுடன் ஓர் அறிவு மலர்ச்சி!

இந்த திட்டம், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை நேர்மறையான வழிகளில் பயன்படுத்தினால் நம் சமுதாயத்தில் பல நல்ல மாற்றங்களை உருவாக்கமுடியும் என்பதை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, மக்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள ஓர் சிறந்த வாய்ப்பை வழங்கிடும்.

இன்று பெரும்பாலான மக்கள் செல்பேசியை பயன்படுத்துகின்றனர். "செல்லிலாற்கு இவ்வுலகம் இல்லை"என்று சொல்லும் நிலையை இன்றைய சமுதாயம் அடைந்துவிட்டது. இதனால் ஏற்ப்பட்டுள்ள பல்வேறு சீர்கேடுகளையும், இன்னல்களையும் எண்ணி வருந்தாமல், இந்த அறிவியல் மாற்றத்தை சமுதாய நன்மைக்குப் பயன்படுத்தும் வழிமுறைகளை ஆய்வுகள் செய்தோம். அம்முயற்சியின் பலனாக உருவாக்கப்பட்டதே இத்திட்டம்
"பத்துலட்சம் மக்களின் செல்பேசியை நூலகமாக மாற்றுதல்.."