There are no translations available.
'செல்பேசி நூலகம்' பத்து லட்சம் தமிழர்களுக்கு வழங்கப்படும். இந்த செல்பேசி நூலகத்தில் சங்க இலக்கிய, பக்தி இலக்கிய நூல்களும், பெரும் எழுத்தாளர்களின் தேசிய மயமாக்கப்பட்ட நூல்களும் இடம் பெறும். இத்திட்டத்தில் பங்குபெற்று லட்சக்கணக்கானோர் பயன்பெறும் வகையில் தங்களுடைய படைப்புகளை வழங்க முன்வரும் எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்களுடைய நூல்களும் வழங்கப்படும். இந்த நூலகத்தை செல்பேசியிலும், கணிணியிலும் படிக்கும் வசதி தரப்படும்.
உண்மையில் இது சாத்தியம்தான். ஏனென்றால் ஓராண்டுக்கு முன்பே SEED என்ற பெயரில் ஓர் ஆயிரம் புத்தகங்களை உள்ளடக்கிய செல்பேசி நூலக மென்பொருளை நாங்கள் வெளியிட்டிருக்கிறோம். பெரும் அறிவியலார் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மட்டுமே இது தற்சமயம் புழக்கத்தில் உள்ளது. இத்தொழில்நுட்ப அதிசயத்தை சாமானிய மக்களும் பயன்படுத்த வகை செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
இந்த செல்பேசி நூலகத்தைப் பெற குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்படும்.. ஒரு எஸ்.எம்.எஸ்.-ஐ ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பி பதிவு செய்யலாம். மேலும், இணையதளம், விண்ணப்ப அட்டைகள் மற்றும் வேறு சில வழிகள் மூலமும் பதிவுகள் மேற்கொள்ளப்படும்.