தமிழ்மொழி இல்லாத செல்பேசிகளிலும் (ஜாவா வசதி உள்ள செல்பேசிகள்) தமிழ் புத்தகங்களை படிக்கும் வசதியை ஏற்படுத்தியது மொபைல்வேதாவின் முதல் சாதனை. அதிலும், இந்தியாவிலேயே முதன் முறையாக ஆயிரம் புத்தகங்களை செல்பேசியில் உள்ள மெமரி சிப்புகளில் பதிந்து பயன்படுத்தும் ஒரு மென்பொருளை உருவாக்கியது மொபைல்வேதாவின் அடுத்த மைல்கல். இதற்கு செல்பேசி மெமரி சிப்புகளில் குறைந்த அளவு இடம் தேவைப்படும்.
இந்த மென்பொருள் SEED (விதை) என்ற பெயரில் 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் நாள் விஐடி பல்கலைக் கழக வேந்தர் திரு.ஜி.விசுவநாதன் அவர்களால் வெளியிடப்பட்டது.
இந்த மாபெரும் சாதனைகளைப் பாராட்டி இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஆ.பெ.ஜே.அப்துல்கலாம் அவர்கள் மொபைல்வேதாவின் தலைமை செயல் அதிகாரி திரு.கணேஷ்ராம் அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி சென்னைப் பத்திரிக்கையாளர் மன்ற திறப்பு விழாவில் நினைவுப் பரிசை வழங்கினார். (http://www.fublish.com/seed/club.php)
பல்வேறு பத்திரிக்கைகளும், சமுக ஆர்வலர்களும், அறிஞர் பெருமக்களும், அரசு உயர் அதிகாரிகளும் மற்றும் பேராசிரிய பெருமக்களும் இம்முயற்சியை வெகுவாகப் பாராட்டினார்கள்.
மேலும் விவரம் அறிய...